மக்களே.! உதவி எண்களை நோட் பண்ணிக்கோங்க..!
வெள்ள பாதிப்புகளில் சிக்காமல் இருக்கவும், மழை தொடர்பான புகார்களுக்கும் இலவச உதவி எண்கள் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மழை தொடர்பான புகார்கள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக மாநகராட்சியின் 150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிலும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044 2561 9204, 044 2561 9206 மற்றும் 044 2561 9207 என்ற தொலைபேசி எண்ணிகளிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
சென்னை மண்டலவாரியாக உதவி எண்கள்:
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நிவாரணம் மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் இந்திய ஆட்சிப் பணி நிலையி,ல் ஒரு மண்டலக் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். 1 முதல் 15 வரை உள்ள மண்டலங்களுக்கு இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் நிலையில் நியமிக்கப்பட்டுள்ள 15 மண்டலக் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அவர்களின் கைபேசி எண்கள் விவரம்
சமூக வளைதள பக்கங்கள்:
மேலும் மாநகராட்சியின் chennaicorporation.gov.in என்ற இணையதளம், Greater Chennai Corporation - Facebook, @chennaicorp என்ற Instagram-லும் @chennaicorper Thread-லும் @chennaicorp - X ஆகிய சமூக வலைதளங்களின் வாயிலாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது
தாம்பரம் மாநகராட்சியில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 18004254355, மற்றும் 18004251600-ஐ தொடர்பு கொண்டு மழை பாதிப்பு புகார் அளிக்கலாம். மீட்புப் பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் தொடர்பான புகார்களை 8438353355 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமும் புகார் அளிக்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம்:
இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பேரிடர் காலங்களில் மற்றும் பேரிடர் இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044 27237107 என்ற தொலைபேசி எண்களிலும், 8056221077 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம்:
செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்காக அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1077 என்ற எண்ணிலும், 044-27427412 மற்றும் 044-27427414 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இதேபோன்று 9944272345 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம்:
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை தொடர்பான புகார் அளிப்பதற்கும், வெள்ள பாதிப்பு உதவிகள் கேட்பதற்கும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1070 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.