1. Home
  2. தமிழ்நாடு

நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்..!

1

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த போஜ்புரி நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹா (72), கடந்த சில நாட்களாக வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவால் குடும்பத்தினர் மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. தனது மெல்லிய குரலால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த சாரதா சின்ஹா மரணச் செய்தியை அவரது மகன் அன்ஷுமன் சின்ஹா ​​உறுதிப்படுத்தினார். 

தொடர்ந்து சாரதா சின்ஹாவின் உடல் டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சாரதாவுக்கு அஞ்சலி செலுத்த அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும் குவிந்து வருகின்றனர்.

நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹாவின் மறைவுக்கு பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 1952-ம் ஆண்டில் பீகாரின் சுபாலில் பிறந்த சாரதா சின்ஹா, தனது பெரும்பாலான பாடல்களை மைதிலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பாடினார். 

கடந்த 1991-ல் அவருக்கு பத்மஸ்ரீ விருதும், 2018-ல் பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது. பீகாரின் வானம்பாடி என்று அழைக்கப்படும் சாரதா, பாலிவுட் மற்றும் போஜ்புரி படங்களுக்கும் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like