மெரினாவில் நுரை பொங்கிய விவகாரம்.. தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!!

சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நுரைபொங்கிய விவகாரம் குறித்து விசாரித்து வந்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். இந்நிலையில் மெரினா கடற்கரைக்கு அருகே கடலில் கலக்கும் அடையாறு உள்ளிட்ட ஆறுகளின் கழிவுகளால் மெரினா கடற்கரையில் நுரைபொங்குவது போன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
2019-ஆம் ஆண்டு டிசம்பரில் மெரினா கடற்கரையில் அதிகளவில் நுரைபொங்கியது தொடர்பாக விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.