சென்னையில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை..!

குடியரசு நாளையொட்டி சென்னையில் ஜன.25, 26 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை மெரீனாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு நாள் விழா அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஜன. 26 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி, சென்னை ராஜ் பவன் முதல் மெரீனா கடற்கரை வரையிலும் அதேபோல முதல்வர் இல்லம் முதல் மெரீனா கடற்கரை வரையிலும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இப்பகுதிகளில் ஜன. 25, 26 ஆகிய நாள்களில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காமராஜா் சாலையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசு நாளையொட்டி அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்படஉள்ளது .