1. Home
  2. தமிழ்நாடு

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் நபர்… பதறவைக்கும் வீடியோ!

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் நபர்… பதறவைக்கும் வீடியோ!


கனமழையால் ஹைதராபாத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் மனிதர் ஒருவர் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எப்போதும் இல்லாத அளவுக்கு 24 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளதால், ஹைதராபாத் முழுக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை ஒரு குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஹைதராபாத் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் மனிதரின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், முக்கிய கட்டிடங்கள் நிறைந்த சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில், அந்த மனிதர் அடித்து செல்லப்படுகிறார்.


உயிரைக்காப்பாற்றிக்கொள்ள அருகில் இருந்த மின்கம்பியை பிடிக்கவும் முயற்சிக்கிறார். ஆனால், வெள்ளத்தின் வேகத்தில் நிலைகுலைந்து மூழ்கும் அந்த மனிதர் காப்பாற்றப்பட்டாரா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை.

newstm.in

Trending News

Latest News

You May Like