வெள்ள பாதிப்பு : உடனடி உதவிக்கு இதை செய்யுங்கள்!!

வெள்ள பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் பெற தமிழக அரசு சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். 1070-ல் இதுவரை 5389 புகார்கள் பெறப்பட்டு 4976 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077-ல் இதுவரை 4164 புகார்கள் பெறப்பட்டு, 3963 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் TNSMART இணையதளத்திலும், வாட்ஸ் அப் எண் 9445869848 மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.
வாட்ஸ் அப் மூலம் பெறப்பட்ட 274 புகார்களில், 151 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
எனவே மக்கள் உடனடியாக புகார் தெரிவித்து நிவாரண உதவி பெற இந்த எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
newstm.in