சுருளி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு : குளிக்கத் தடை!

தேனி மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாகச் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாகச் சுருளி அருவியின் கீழ் பகுதியில் அமைந்துள்ள பூத நாராயணன் கோயில் வரை தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. இதனால் பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.