1. Home
  2. தமிழ்நாடு

தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

1

கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஆர்.பி. அணைக்கு நேற்று 921 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 50.15 அடியாக உயர்ந்துள்ளது.

மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 735 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள 16 ஊராட்சி பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து அணையின் நீர்வரத்தை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like