விரைவில் சேலம் – ஹைதராபாத், சேலம்-பெங்களூர் நகரங்களுக்கு விமான சேவை..!

சேலம் தொகுதியின் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த கமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையத்தில் நடைபெற்று வரும், கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., “இண்டிகோ விமான சேவை நிறுவனம், சேலம் – ஹைதராபாத் – சேலம், சேலம்-பெங்களூர்- சேலம் ஆகிய வழித்தடங்களில் வாரத்தில் 4 நாட்களுக்கும், அலைன்ஸ் ஏர் நிறுவனம் சேலம்- பெங்களூர்- சேலம், சேலம்- கொச்சி- சேலம் ஆகிய வழித்தடங்களில் வாரத்தில் 7 நாட்களுக்கும் விமான சேவையைத் துவங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சேலம் விமான நிலையத்திலிருந்து விமான சேவை மேற்கண்ட வழித்தடங்களுக்கு செப்டம்பர் மாத இறுதியில் துவங்கப்படும் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.