1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் விமானங்கள் தரையிறங்காமல் வட்டமடிப்பு..!

Q

சென்னையில் இடியுடன் மழை பெய்யும் நிலையில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு மோசமான வானிலையால் -திருச்சியில் இருந்து சென்னை வந்த விமானம் வானிலேயே வட்டமடித்து வருகிறது.
சிங்கப்பூர், அகமதாபாத், புவனேஸ்வர், விஜயவாடாவில் இருந்து வந்த விமானங்களும் தரையிறங்க முடியாமல் தவிப்பு.
தமிழ்நாடு தலைநகர் சென்னையில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கப்பட வேண்டிய விமானங்கள் இறங்க முடியாமல் வானில் வட்டமடித்து கொண்டுள்ளன.
திருச்சி சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தது சென்னை நோக்கி வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் தொடர்ந்து வட்டம் அடுத்து வருகின்றன. மோசமான வானிலை இடி மின்னல் காரணமாக தரையிறக்குவதில் சிக்கல் இருப்பதாக விமான நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது. சென்னை ஆலந்தூர், மீனம்பாக்கம், விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர், கிண்டி, பரங்கிமலை, மாம்பழம், நுங்கம்பாக்கம், எக்மோர், கோயம்பேடு உட்பட பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.
இது தவிர சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் கனமழை இடைவிடாது பெய்து வருவதால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இண்டிகோ சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மலை காற்றின் நியத்தை பொறுத்து ஒன்றன்பின் ஒன்றாக தரையிறக்க விமான நிலையம் முயற்சி செய்து வருகிறது. வானில் வட்டமடிக்கும் விமானங்களில் பயணிகள் சற்று பீதியுடன் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னையில் தரையிறக்கப்பட வேண்டிய விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன.

Trending News

Latest News

You May Like