விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு சென்னையில் அவசரமாக தரையிறக்கம்..!
ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னையிலிருந்து 170 பயணிகளுடன் நேற்று காலை சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற ஏஐ-346 என்ற விமானம் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு கண்டறிந்த நிலையில், முன்னெச்சரிக்கை சோதனைக்காக விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பத்திரமாகத் தரையிறங்கினர். சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குப் பயணிகளை உடனடியாக செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.