நெகிழ்ச்சி சம்பவம்! மனைவியை 90கிமீ தூரம் தட்டு ரிக்ஷாவில் அழைத்துச் சென்ற கணவர்!

70 வயது முதியவர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மனைவியை மருத்துவமனைக்கு 90 கி.மீ. தூரம் தட்டு ரிக்சாவில் அழைத்துச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் முதியவரின் மனைவி கபீர் பாய் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் அவருடைய நிலைமை மோசமாகவே கட்டாக் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.
ஆனால் அங்கிருந்து கட்டாக் செல்ல அவரால் ஆட்டோவை வாடகைக்கு எடுக்கமுடியவில்லை. ஏனென்றால் கட்டாக் வரை செல்ல ரூ.1200 கேட்டுள்ளனர். வேறு வழி தெரியாத முதியவர் சைக்கிள் தட்டு ரிக்சாவை எடுத்துச் சென்றிருக்கிறார்.
கட்டாக்கில் அவர்களைக் கண்டுகொண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், அவரது மனைவியை மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்தனர்.
கடந்த ஓராண்டாக மிகுந்த துயரத்துக்கு ஆளாகி வருவதாக கூறும் முதியவர், இந்த முறை பயணம் ரொம்பவும் வலி மிகுந்ததாக இருந்ததாக கூறினார்.
ஏழைத் தம்பதியின் நிலைமை அறிந்து கட்டாக் எஸ்சிபி மருத்துவமனை நிர்வாகம் இலவசமாக மருத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது.
newstm.in