ஐபில் போட்டியில் நெகிழ்ச்சி.. தந்தை இறந்த சோகத்திலும் வெற்றிக்கு மந்தீப் சிங்.. சக வீரர்கள் ஆறுதல் !

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மயங்க் அகவர் காயம் காரணமாக கடந்த 2 போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் அவருக்கு பதிலாக மந்தீப் சிங் தொடக்க வீரராக கே.எல் ராகுலுடன் களமிறங்கி வருகிறார்.
அதில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரை சதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதனால் அவர் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மேலும் மூன்று நாட்களுக்கு முன்பு அவரது தந்தை நாள்பட்ட நோய் காரணமாக காலமானார். எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவரால் உடனடியாக சொந்த ஊருக்கு திரும்பமுடியவில்லை. துபாயில் முகாமிட்டுள்ள அணியுடனே மந்தீப் தங்கிவிட்டார்.
இந்நிலையில் தான் தந்தை இறந்த சோகத்திலும் கொல்கத்தா அணியுடனான ஆட்டத்தில் களம்கண்ட மந்தீப் 56 பந்துகளில் 66 ரன்களை சேர்த்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார். கேப்டன் கே.எல்.ராகுல், கோச் அனில் கும்ப்ளே மற்றும் சக வீரர்கள் களத்திற்கே சென்று அவரை வாழ்த்தி ஆறுதல் படுத்தினர். இந்த நிகழ்வு மைதானத்தில் மிகவும் உருக்கத்தை ஏற்படுத்தியது.
அ
தேபோல், மந்தீப் அரை சதம் கடந்ததும் வான் நோக்கி பார்த்து நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தார். அப்பா இது உங்களுக்கு சமர்ப்பணம் என மந்தீப் சொன்னது போல இருந்ததாக ரசிகர்கள் அதனை பதிவிட்டு கூறி வருகின்றனர்.
You deserve it all and more @mandeeps12 😊😊#Dream11IPL pic.twitter.com/c5GRlWgU5q
— IndianPremierLeague (@IPL) October 26, 2020
newstm.in