1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் வாகா எல்லையில் கொடி நிகழ்வு! பொதுமக்களுக்கு அனுமதி உண்டா ?

1

பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டனா். அவர்களது படுகொலைக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி திடீரென பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.

இதில் பயங்கரவாதிகள் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான், இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. எனினும் இந்தியா அந்த தாக்குதல்களை முறியடித்து, தக்க பதிலடி கொடுத்தது. இதற்கிடையே இந்தியா பாகிஸ்தான் இடையேயான முக்கிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் வான் பரப்பை பயன்படுத்த இருநாடுகளும் தடை விதித்தது. இதனால் விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே தான் இந்தியா பாகிஸ்தான் எல்லையானா அட்டாரி-வாகா பகுதியில் உள்ள எல்லை கதவுகள் அதிரடியாக மூடப்பட்டன. முன்னதாக இந்தியாவில் தங்கி இருந்த பாகிஸ்தானியர்கள் அந்த எல்லைகள் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுமார் 12 நாட்கள் பாகிஸ்தான்-இந்தியா எல்லைகள் மூடப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் இன்று முதல் அட்டாரி-வாகா எல்லைகளில் மீண்டும் கொடி நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என எல்லை பாதுகாப்பு படை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் அட்டாரி வாகா எல்லையில் தினமும் வழக்கம்போல் கொடி ஏற்றம், இறக்கம் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஆனால் நாளையில் இருந்து தான் பொதுமக்கள் பார்வைக்கு அந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமும் அட்டாரி வாகா எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் தேசிய கொடிகளை ஏற்றி, இறக்கும் நிகழ்வை நடத்துவார்கள். இதனை காண தினமும் பல நூறு பொதுமக்கள் அங்கு கூடுவார்கள். இருநாட்டு எல்லைகளிலும் தினமும் நடக்கும் முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்பட்டது. இது பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு ரத்து செய்தது. இந்த நிலையில் தற்போது 12 நாட்கள் கழித்து மீண்டும் கொடி ஏற்ற-இறக்க நிகழ்ச்சி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து இருந்தது. தற்போது இந்தியா, பாகிஸ்தான் மீது மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், பாகிஸ்தானை உலக அளவில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நாடு என்பதை வெளிபடுத்த குழு அமைத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், கனிமொழி, சசி தரூர் உள்ளிட்டோர் தலைமையிலான குழுக்கள் உலக நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளனா். தற்போது சீனா மற்றும் துருக்கி போன்ற சில நாடுகள் தான் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. ஆனால் அமெரிக்கா- ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியா பக்கம் தான் உள்ளன. மேலும் அணு ஆயுதங்களை கையாளும் தகுதி பாகிஸ்தானுக்கு இல்லை என்ற விஷயத்தை உலக நாடுகளுக்கு இந்தியா அழுத்தம் திருத்தமாக கொண்டு சேர்த்துள்ளது.

Trending News

Latest News

You May Like