டிச. 9ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும்..! மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.!
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு டிசம்பர் 9 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அந்த வகையில் இந்த கூட்டமானது டிசம்பர் 10 மற்றும் 11-ந் தேதி வரை நடைபெறும் என எதிர்பாரக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை, அரசு ஊழியர்கள் கோரிக்கை, தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மகளிர் உரிமை தொகை தொடர்பாக விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதியவர்களை இணைப்பது தொடர்பாகவும், மகளிர் உரிமை தொகை நிபந்தனைகளை தளர்த்துவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் டிசம்பர் மாதம் 9-ம் தேதி காலை 9.30 மணி முதல் நடைபெறும்
— Spark Media (@SparkMedia_TN) November 25, 2024
- சபாநாயகர் அப்பாவு தகவல்#Tamilnadu #Assembly #TNGovt #SparkMedia pic.twitter.com/LvqXFRIi6t