1. Home
  2. தமிழ்நாடு

மெத்தனால் சப்ளை செய்த ஆலை கண்டுபிடிப்பு – 5 பேர் கைது..!

Q

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் அருகிலுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக சேலம், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் மற்றும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களும் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர்.இதுவரை 59 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் தயாரிக்க மெத்தனால் விற்பனை செய்த ஆலையை கண்டறிந்த போலீசார் உரிமையாளர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர். சென்னை மாதவரத்தைச் சேர்ந்த பிரபல கெமிக்கல் ஆலையில் இருந்து மெத்தனால் விநியோகம் செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஆலையின் உரிமையாளர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like