1. Home
  2. தமிழ்நாடு

ஏப்ரல் 15 முதல் மீன்புடி தடை காலம் தொடக்கம்..!

Q

தமிழகத்தில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் ஏப்ரல், மே, ஜுன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்க காலமாக, மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண் டறிந்துள்ளது.

மீன்வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில், இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப் படுகிறது. அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15-ம் தேதி அமலுக்கு வருகிறது. 

ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை (61 நாட்கள்) தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியான வங்கக் கடலில் விசைப்படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

இதனால், தமிழக கடலோர மீன்பிடி துறைமுகங்களில் உள்ள  விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாது. இந்த தடைக்காலத்தில் தமிழ கத்திலுள்ள 15,000 விசைப்படகு களும் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி நங்கூரமிடப்பட்டிருக்கும். மேலும் இந்த 61 நாட்களை மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைக்கப் பயன்படுத்திக் கொள்வர்.
இதனால் மீன்கள் கிடைக்கும் அளவு குறைவதால், மீன் விலை உயரக்கூடும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

Trending News

Latest News

You May Like