1. Home
  2. தமிழ்நாடு

அரபிக்கடல் பகுதியில் இன்று முதல் 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம்..!

1

தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கம் காரணமாக கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கிய 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் வரும் 15ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் மேற்கு கடல் பகுதிகளான அரபிக்கடல் பகுதியில் 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முதல் கேரளா உட்பட குஜராத் வரை ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரை மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தடைகாலம் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மற்றும் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகங்களில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Trending News

Latest News

You May Like