1. Home
  2. தமிழ்நாடு

திருநெல்வேலி மாவட்ட நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!

1

தென் கிழக்கு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலி மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஏற்கனவே மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளது. மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் மீன் பிடி தடை காலம் அமல்படுத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன் பிடி தடை காலம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த தடை காலத்தில் விசை படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாது. ஆனால் சிறிய படகில் குறுகிய தூரம் சென்று வருபவர்களுக்கு தடை கிடையாது. மீன் பிடி தடை காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் விசைப் படகு மீனவர்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்களுக்கு சூறைக் காற்று காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இடிந்தகரை, கூடண்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஜூன் 13ஆம் தேதி கன முதல் மிக மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்!

  • கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள்,
  • நீலகிரி
  • தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்கள்

நாளை கனமழை பெய்யும் மாவட்டங்கள்!

  • திருநெல்வேலி,
  • தேனி
  • கன்னியாகுமரி

ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை மறு தினம் (ஜூன் 15) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like