மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்குள் செல்ல தடை!

மிக கனமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் பாதுகாப்பு கருதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மீனவர்களும் மீன்பிடிக்க இன்றும் நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அருண்தம்பு ராஜ் அறிவித்துள்ளார்