மதுரை மாநகராட்சி முதல் பெண் ஆணையர்..!

மதுரை மாநகராட்சி முதல் பெண் ஆணையராக சித்ரா பொறுப்பேற்றார். ஆணையராக இருந்த தினேஷ்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக பதவி உயர்வு பெற்றார். இவருக்கு பதிலாக மின் ஆளுமை துறை இணை இயக்குநராக பணியாற்றிய சித்ரா, மதுரை மாநகராட்சியின் 71-வது ஆணையராக நியமிக்கப்பட்டார்.
மாநகராட்சியின் 54 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக தற்போதுதான் பெண் ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2019-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி.
மதுரை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ள சித்ராவுக்கு அன்றாட பணிகளை தாண்டி பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. மதுரை மாநகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்ற சித்ராவுக்கு அமைச்சர்கள், மேயர், திமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல அலுவலக அதிகாரிகள்-கவுன்சிலர்களிடையே நீடிக்கும் பனிப்போர், மண்டலத் தலைவர்களின் அரசியல் ஆகியவற்றை தாண்டி, மாநகராட்சியில் நிறைவேற்ற வேண்டிய பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பணிகள் சவால்களாக நிற்கின்றன.