1. Home
  2. தமிழ்நாடு

ஐபிஎல்லில் விளையாடும் முதல் பழங்குடியின வீரர் விபத்தில் சிக்கினார்...ஐபிஎல் போட்டியில் பங்கேற்பாரா?

Q

இந்த வருட ஐபிஎல் ஏலத்தில்
ரூ.20 லட்சம் அடிப்படையில் விலையில்
அறிமுகமான சில வீரர்க
ள் முன்னணி அணிகள் போட்டிபோட்டு கொண்டு கோடிகளை குவித்து வாங்க ஆர்வம் காட்டின. அப்படி வாங்கப்பட்டவர்களில் ஒருவர்தான் ராபின் மின்ஸ். 21 வயதான இவரை குஜராத் டைட்டன்ஸ் ரூ.3.6 கோடிக்கு வாங்கியது.
அடிப்படையில் விலையான ரூ.20 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதே அணிகள் ராபினை வாங்க முனைப்புக் காட்டின. மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என அணிகள் போட்டியிட, கோடிகள் எகிறியது. இறுதியில் ரூ. 3.6 கோடிக்கு அவரை வசப்படுத்தியது குஜராத் டைட்டன்ஸ். இந்த விலைக்கு ஏலம் விடப்பட்டார் என்பதை விட ஐபிஎல் வரலாற்றில் இத்தொடரில் கால்பதிக்கும் முதல் பழங்குடி கிரிக்கெட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ராபின் மின்ஸ். ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தைச் சேர்ந்தவரான தற்போது ஜார்க்கண்டின் தலைநகரான ராஞ்சியில் உள்ள நம்கும் பகுதியில் வசித்து வருகிறார்.
இவரின் தந்தை ஓய்வுபெற்ற ராணுவ வீரர். தற்போது ராஞ்சி விமான நிலையத்தில் காவலாளியாக பணிபுரிகிறார். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ராபின் மின்ஸ் ஜார்க்கண்டில் பிறந்திருந்தாலும், இதுவரை ஜார்க்கண்ட் சீனியர் அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ரஞ்சி கோப்பையிலும் அம்மாநிலத்தை இதுவரை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றாலும், ஜார்க்கண்டின் U19 மற்றும் U25 அணிகளில் அங்கம் வகித்துள்ளார்.
தோனியின் தீவிர ரசிகர் இவர். எம்எஸ் தோனியின் சிறுவயது பயிற்சியாளரான சஞ்சல் பட்டாச்சார்யாவே ராபினுக்கும் பயிற்சி அளித்து வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் U19 போட்டிகளில் விளையாடும்போது மும்பை இந்தியன்ஸ் அணி ராபினை கவனித்து, அவரின் திறமையை உணர்ந்து அவருக்கு இங்கிலாந்தில் சிறப்பு பயிற்சி அளித்த போதே கவனிக்கப்பட்ட வீரரானார்.
 இந்நிலையில் ராபின் மின்ஸ், இருசக்கர வாகன விபத்தில் சிக்கி, காலில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வரும் ஐபிஎல் தொடருக்காக இவர் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூ.3.60 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதன் மூலம், ஐபிஎல்லில் விளையாடும் முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையைப் பெற இருந்தார். இந்நிலையில் திடீர் விபத்தால் அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Trending News

Latest News

You May Like