நாளை இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்! இந்தியாவில் தெரியுமா?

சூரியன்-நிலவு-பூமி ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் தோன்றுகிறது. இந்த நேரத்தில் சூரியனை நிலவு மறைத்து விடுகிறது. சூரியனை விட நிலவு 15 மடங்கு சிறியதுதான். ஆனால், நிலவுக்கும் சூரியனுக்கும் இடையே 15 மடங்கு தொலைவு இருப்பதால் இரண்டும் ஒரே சைஸ் போல தெரியும். எனவே, நிலவு சூரினை மறைக்கும் அளவுக்கு போதுமானதாக இருக்கும். இப்படி நடக்கும்போது திடீரென சூரியனின் வெளிச்சம் குறையும். மார்ச் 29ம் தேதி இந்த நிகழ்வுதான் நடக்கப்போகிறது.
ஆனால், இந்த முறை முழு சூரிய கிரகணம் நடக்காது. அதாவது, நிலவு சூரியனை முழுமையாக மறைத்துவிடாது. மாறாக சிறியதாக, பாதியளவுக்கு மட்டுமே மறைக்கும். இதனை பகுதி சூரிய கிரகணம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். சுமார் 80 கோடி மக்கள் இதனை பார்க்க முடியும். ஆனால் இந்தியாவில் இது தெரியாது.
வட அமெரிக்கா, கனடா, ஐரோப்பாவின் சில பகுதிகள், மற்றும் ஆர்க்டிக் உள்ளிட்ட உலகின் சில பகுதிகளில் தெரியும். சிம்பிளாக சொல்வதெனில் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில்தான் இது தெரியும். கிரகணம் உச்சியை அடையும்போது இந்தியாவில் சூரியன் ஏறத்தாழ மறைந்திருக்கும்.
ஒருவேளை நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் சிறப்பாக இதை பார்க்கலாம். அதாவது,
நியூயார்க் (New York): 6:35 AM-7:12 AM
மாச்சூசெட்ஸ் (Massachusetts): 6:27 AM-7:08 AM
மேன் (Maine): 6:13 AM-7:17 AM
பென்சில்வேனியா (Pennsylvania): 6:46 AM-7:08 AM
நியூஜெர்சி (New Jersey): 6:43 AM -7:06 AM
விர்ஜீனியா (Virginia): 6:50 AM-7:03 AM
இந்த நேரங்களில் உங்களால் கிரகணத்தை பார்க்க முடியும். கனெட்டிகட், மரிலாந்து, ரோட் ஐலாந்து, நியூ ஹாம்ஷையர், வெர்மாண்ட், மேற்கு விர்ஜீனியா மற்றும் வாஷிங்டன் டி.சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் கிரகணத்தை பார்க்க முடியும்.
சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது ஆபத்தானது. ISO 12312-2 தரச்சான்று பெற்ற கிரகணம் பார்ப்பதற்காகவே தயாரிக்கப்பட்ட கண்ணாடிகளையும், சோலார் வடிக்கட்டி கொண்ட கண்ணாடிகளையும், பின்ஹோல் புரொஜெக்டர் ஆகியவற்றையும் பயன்படுத்தி கிரகணத்தை பார்க்கலாம். சாதாரண கூலிங் கிளாஸ் (Sunglasses) பயன்படுத்துவதும் ஆபத்தானதுதான்.