1. Home
  2. தமிழ்நாடு

தச்சங்குறிச்சியில் 2024-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு ..!

1

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் சூடு பிடித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 1-ம் தேதி அந்தோணியார் தேவாலய புத்தாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம்.

ஆனால் ஒரு சில காரணங்களால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தாமதமானது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டை நடத்தும் பொருட்டு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாடிவாசல், பேரிகார்டு அமைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற 6-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த விழா குழுவினர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருந்தனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தது. இந்த நிலையில், வருகிற ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டியை புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் நடத்த அனுமதி வழங்கி அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like