1. Home
  2. தமிழ்நாடு

வரும் 13-ம் தேதி இன்டியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..!

1

பா.ஜனதா அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மாதம் நடந்த 2-வது கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 'இன்டியா' என பெயரிடப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்டியா கூட்டணியின் 3-வது கூட்டம் மராட்டிய தலைநகர் மும்பையில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இன்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டது. இந்தக் குழுவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் உள்பட 13 பேர் இடம் பெற்றுள்ளனர். சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் இடம் பெறவில்லை.

இந்நிலையில் இன்டியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் 13-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்டம்பர் 18-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக இன்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Trending News

Latest News

You May Like