1. Home
  2. தமிழ்நாடு

கோயில்களில் முதலுதவி மையம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..!

கோயில்களில் முதலுதவி மையம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..!


இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 7 கோயில்களில் மருத்துவ முதலுதவி மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், திருத்தணியில் உள்ள முருகன் கோயில், பழனி பாலதண்டாயுதபாணி கோயில், மருதமலை, திருவண்ணாமலை, மேல்மலையனூர், சோளிங்கர் என ஏழு இடங்களில் மருத்துவ முதலுதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மருத்துவ மையங்களில் முதலுதவி மற்றும் அடிப்படை சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரத்த அழுத்த கருவி, படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன.

இந்த மருத்துவ மையங்களை சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த பணிக்காக ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் வீதம், கோயில் நிதியில் இருந்து 3 கோடி ரூபாய் செலவிடப்படும் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Trending News

Latest News

You May Like