தரைமட்டமான பட்டாசு ஆலை... 7 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!

விருதுநகர் மாவட்டம் செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று வெடி விபத்து ஏற்பட்டது.
இதில், ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திறகுச் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உராய்வு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர்.தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்காத தொழிற்சாலைகள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்