நண்பரை பார்த்து விட்டு வீடு திருப்பும் போது , இரு சக்கர வாகனத்தில் பற்றிய தீ விபத்து !!

நண்பரை பார்த்து விட்டு வீடு திருப்பும் போது , இரு சக்கர வாகனத்தில் பற்றிய தீ விபத்து !!

நண்பரை பார்த்து விட்டு வீடு திருப்பும் போது , இரு சக்கர வாகனத்தில் பற்றிய தீ விபத்து !!
X

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் தனது நண்பர் பிரவீன் என்பவருடன் தனது இருசக்கர வாகனத்தில் சுங்கச்சாவடி அருகே உள்ள தங்களின் நண்பரை பார்த்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது செட்டியப்பணுர் அருகில் உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் எதிரில் வந்த சைக்கிள் இரு சக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு திடீரென தீ பிடித்து எரிந்தது.

இதில் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது .இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் அங்கிருந்த இளைஞர்கள் சிலர் தீயை அணைக்க முயற்சித்தும் தீ மளமளவென எரிந்ததால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது.

இதில் எதிரில் சைக்கிளில் வந்த இந்திராநகர் பகுதியை சேர்ந்த முதியவர் பச்சையப்பன் என்பவர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி கிராமிய போலீஸார் தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newstm.in

Next Story
Share it