1. Home
  2. தமிழ்நாடு

ஆம்னி பேருந்தில் பயங்கர தீ.. நூலிழையில் தப்பிய பயணிகள்!

Q

திருச்சியில் இருந்து கோவை நோக்கி நேற்றிரவு (ஜூன் 28), 30 பயணிகளுடன் தனியார் எலக்ட்ரிக் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்து இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில், திருப்பூர் வந்தடைந்த நிலையில் சில பயணிகளை அங்கு இறக்கி விட்டு, பின்னர் சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டிருந்தது.
அப்போது கருமத்தம்பட்டி சென்னி ஆண்டவர் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத வகையில் ஓட்டுனநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தின் தடுப்பு சுவரில் பயங்கர வேகத்தில் மோதியது. இதில், பேருந்தின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பேருந்தின் பேட்டரியில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பயணிகள், பயத்தில் அலறிக் கொண்டு அவர்கள் கீழே இறங்க முயன்றனர். ஆனால், கதவு திறக்காததால் அவர்களால் வெளியேற முடியவில்லை.
இதனால் பயத்தில் பஸ்ஸுக்குள் அங்குமிங்குமாக பயணிகள் கத்திக் கொண்டு ஓடினர். அதற்குள்ளாக பஸ் முழுவதும் தீ மளமளவென பரவத் தொடங்கியது. அப்போது அந்த வழியாக வந்த லாரி ஓட்டுநர்கள், இரும்பு ராடுகளை வைத்து பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து, உள்ளே இருந்த பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதனால் நல்வாய்ய்பாக, சிறு காயங்களுடன் உயிர் சேதமின்றி பேருந்தில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டனர்.

Trending News

Latest News

You May Like