எஃகு ஆலையில் பயங்கர தீ விபத்து..!
விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு எஃகு ஆலையில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் 1.6 மில்லியன் டன் உற்பத்தி திறனுடன் 1991 இல் தொடங்கப்பட்டது. இந்த ஆலை 22,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் சுமார் 20 மில்லியன் ஸ்டீல் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த ஆலையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மூலம் அம்மாநில அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. இந்த நிலையில் எஃகு ஆலையில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த தகவலை அறிந்த அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் இயந்திரத்தில் எண்ணெய் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், பின்னர் அது அருகிலுள்ள கேபிள்கள் மற்றும் இயந்திரங்களுக்கு பரவியது விசாரணையில் தெரிவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்ற விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.தொடர்ந்து காவல்துறையின் முழுவிசாரணைக்கு பிறகு முழுவிவரம் தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் பொருள்கள் சேதமடைந்துள்ளனர்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை சுமார் 300 லாரிகளில் ஏற்றப்பட்ட உருகிய எஃகு தரையில் சிந்தியதால், ஒரு பெரிய தொழில்துறை விபத்து ஏற்ப்பட்டது. இது குறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கைகளின்படி, உருகிய எஃகு, எஃகு உருக்கும் கடைக்கு கொண்டு செல்வதற்காக உலையில் இருந்து ஒரு டர்போ லேடில் காரில் (TLC) மாற்றப்பட்டது.
அப்போது TLC இல் திடீரென ஒரு விரிசல் ஏற்பட்டு, உருகிய எஃகு தரையில் சிந்தியது.இந்த கசிவின் விளைவாக, தீ விபத்து ஏற்பட்டு, மின் கேபிள்கள் சேதமடைந்து, தண்டவாள உள்கட்டமைப்பை பாதித்தது. அதிர்ஷ்டவசமாக, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.ஆலை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உட்பட அவசர குழுக்கள் உடனடியாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.