1. Home
  2. தமிழ்நாடு

உடனே முடிங்க! ஜூன் 30 கடைசி நாள்..! ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு கடைசி வாய்ப்பு!

1

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் உணவு வழங்கல் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ், அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களும் e-KYC செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் ரேஷன் கார்டில் அவர்களுக்கு கிடைத்து வரும் பலன்கள் நின்றுவிடும். எனவே உடனே இந்த வேலையை முடிப்பது நல்லது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசின் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. இதற்கு அரசு ரேஷன் விநியோக மையத்தில் இருந்து ரேஷன் கார்டை காண்பித்தால் மட்டுமே ரேஷன் கிடைக்கும். ஆனால் இப்போது உணவு வழங்கல் துறை அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் e-KYC சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான கடைசி தேதி 2024 ஜூன் 30 என உணவு வழங்கல் துறை நிர்ணயித்துள்ளது.

இந்த தேதிக்குள் யாராவது eKYC சரிபார்ப்பை முடிக்கவில்லை என்றால் ரேஷன் கார்டு மூலம் வழங்கப்படும் இலவச ரேஷன் திட்டத்தின் பலன்களை அவர்களால் பெற முடியாது. ரேஷன் கார்டில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் eKYC செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் ரேஷன் கார்டில் பலன் பெற தகுதியில்லாத பலர் உள்ளனர். எனவே eKYC சரிபார்ப்புஅவசியமாக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டில் e-KYC செய்ய உங்கள் அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் செல்ல வேண்டும். அதன் பிறகு அங்குள்ள ரேஷன் டீலரை சந்திக்க வேண்டும். கடையில் இருக்கும் பிஓஎஸ் மெஷினில் உங்கள் கைரேகையை பதிவைக் கொடுக்க வேண்டும். இதற்குப் பிறகு உங்கள் e-KYC செயல்முறை நிறைவடையும். குடும்பத் தலைவரின் கைரேகை மட்டுமல்லாமல், ரேஷன் கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்கள் கைரேகைப் பதிவை வழங்க வேண்டும்.

ஜூன் 30ஆம் தேதிக்குள் இந்த அப்டேட்டை உடனடியாக முடிப்பது நல்லது. உங்கள் ரேஷன் கார்டு மூலம் கிடைக்கும் பலன்களைப் பெற இம்மாத இறுதிக்குள் ரேஷன் கடைக்குச் சென்று உங்களுடைய கைரேகைப் பதிவை வழங்கி கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் ரேஷன் வாங்கவே முடியாது.

Trending News

Latest News

You May Like