விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் இருப்பிடம் கண்டுபிடிப்பு.. கைது செய்யும் நடவடிக்கை தீவிரம் ?

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு 800 என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க இருந்தார். ஆனால் தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பினரின் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது.
இதனால் முத்தையா முரளிதரன் கேட்டுக்கொண்டதால் அவர் அப்படத்தில் இருந்து நன்றி, வணக்கம் என கூறிவிட்டு விலகியுள்ளார். இந்நிலையில், ரித்திக் என்ற பெயரிலான டிவிட்டர் பக்கத்தில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், விஜய் சேதுபதிக்கு எதிராகவும் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், அந்நபர், விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்திருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், போலீசாரிடமும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மிரட்டல் விடுத்த நபரின் டிவிட்டர் ஐ.பி. முகவரியை கொண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் விசாரணையை முடுக்கினர். அப்போது, இலங்கையிலிருந்து அந்த டிவிட்டர் ID இயக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இலங்கையில் விசாரணை நடத்துவதற்காக இண்டர்போலின் உதவியை நாடும் முயற்சியில் சைபர் கிரைம் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மத்திய அரசுக்கு முறைப்படியான கடிதத்தை சைபர் கிரைம் போலீசார் அனுப்பியுள்ளனர்.
newstm.in