1. Home
  2. தமிழ்நாடு

செம கண்டுபிடிப்பு..! சாலையில் ஓடும் கார் விமானமாக மாற 90 விநாடி போதும்...!

1

ஸ்லோவாக்கியாவை தலைமையிடமாகக் கொண்ட கிளைன் விஷன் என்ற நிறுவனம் ஏர்கார் எனப்படும் பறக்கும் காரை உருவாக்கி வருகிறது. வருகிற 2026-இல் வணிக உற்பத்திக்கு கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பறக்கும் கார், சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு வணிக உற்பத்தியில் அறிமுகமாகும் முதல் பறக்கும் கார் ஆகும் .

விலை: 800,000 டாலர் முதல் 1 மில்லியன் டாலர் வரை
கார் டூ விமானமாக 90 வினாடிகளில் மாறி கொள்ளும் திறன் கொண்டது.
வேகம்: 155 mph
பறக்கும் உயரம்: 10,000 அடி
பயண தூரம்: 620 மைல்கள்
சாலை வேகம்: 124 mph
சாலை பயண தூரம்: 497 மைல்கள்
இருக்கைகள் எண்ணிக்கை: 2

இந்த ஏர்கார், 2022-இல் பறக்கும் விமானமாக சான்றிதழ் பெற்றது. இதுவரை 170 பறக்கும் மணிநேரங்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பறக்கும் மற்றும் தரையிறங்கும் சோதனைகளை முடித்துள்ளது .

கார் மற்றும் விமானம் ஆகிய இரண்டிலும் செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏர்கார், சுமார் இரண்டு நிமிடங்களில் கார் முதல் விமானம் ஆக மாற்றமடைகிறது. இதில் மடிக்கக்கூடிய இறக்கைகள், மடிக்கக்கூடிய வால் மற்றும் பாதுகாப்புக்காக பாராசூட் அமைப்பு உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகளின் பாதுகாப்பு அங்கு உறுதி செய்யப்படுகிறது.

கிளைன் விஷன் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டெபன் கிளைன், பறக்கும் ஆசையை பொதுமக்களின் கைகளில் கொண்டு வருவது என் வாழ்நாள் கனவு என தெரிவித்துள்ளார் .

இந்த ஏர்கார், சாலை மற்றும் வானில் பயணிக்கக்கூடிய புதிய போக்குவரத்து முறையை உருவாக்கும் வகையில், தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான படியாக கருதப்படுகிறது. துபாயில் பறக்கும் கார் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like