நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிதி உதவி..!
தமிழ் நாடு தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் சார்பில் ரூ.50 லட்சத்துக்கான நலத்திட்ட உதவிகளை 941 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான உதவி நிதி காசோலையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்பட கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை போன்ற பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கி, நாட்டுப்புறக் கலைகளுக்குப் புத்துயிர் ஊட்டி அக்கலைகளை மக்களிடையே பிரபலப்படுத்தவும், இக்கலைகளை அழியாமல் பாதுகாத்து எதிர்காலத் தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் வகையில் 2007ஆம் ஆண்டு தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் தோற்றுவிக்கப்பட்டது.