1. Home
  2. தமிழ்நாடு

இன்று 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்!

1

நாட்டின் பொருளதாரத்தையும் மக்களின் வரவு செலவுகளையும் திட்டமிடும் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது. 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பல்வேறு துறைகளின் வளர்ச்சி எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான ஒரு வழிகாட்டியாகவும் திகழப் போகும் பட்ஜெட்டை நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் உரையை வாசிக்க உள்ளார். நிதியமைச்சராக தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா, தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும்.

2025 மத்திய பட்ஜெட்டில் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாலை மற்றும் இந்திய ரயில்வே மேம்பாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படும், என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாதச் சம்பளம் பெறுபவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வருமான வரி விலக்கு அறிவிப்பு வெளியாகுமா என்று எதிர்பார்க்கின்றனர்.

குறிப்பாக புதிய வருமான வரி திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் இடம்பெறுமா என்று காத்திருக்கின்றனர். மத்திய அமைச்சரின் பட்ஜெட் உரையானது நாடாளுமன்ற தொலைகாட்சியான சன்சத் டிவியில் ஒளிபரப்பப்படும். 

மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி,“ஜனநாயக நாட்டில் இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நேரத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது லட்சுமியின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும். சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப இந்தியா தன்னை உயர்த்தி கொண்டுள்ளது. 3வது முறையாக நடைபெறும் என்னுடைய ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் முழு பட்ஜெட் இது. 2047ல் இந்தியா சுதந்திரமடைந்த 100வது நிறைவு ஆண்டை கொண்டாடும் போது நமது இலக்கான 'விக்சித் பாரத்' என்பதை அடைந்திருப்போம். அதற்கு இந்த பட்ஜெட் புது உற்சாகத்தையும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையையும் கொடுக்கும்,” என்றும் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like