1. Home
  2. தமிழ்நாடு

ஒருவழியா போக்குவரத்து துறைக்கும் காவல்துறைக்கும் இருந்த பிரச்சனை ஓய்ந்தது..!

1

கடந்த 21ம் தேதி அன்று, நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் அரசுப்பேருந்தில் ஏறிய ஆயுதப்படை காவலர் ஆறுமுகப்பாண்டியனிடம், டிக்கெட் எடுக்கும்படி நடத்துநர் கேட்டுள்ளார். அதற்கு, "அரசு பணியில் உள்ள அனைவருக்கும் அரசு பேருந்தில் டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள்தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது" என்று ஆறுமுகப்பாண்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுதொடர்பான வீடியோ, சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, "காவலர்கள் பேருந்தில் பயணிக்கும்போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே டிக்கெட் எடுக்க தேவையில்லை" என்று போக்குவரத்து துறை விளக்கம் அளித்திருந்தது. மேலும், ஆறுமுகப்பாண்டி மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கும்படியும் பரிந்துரை செய்திருந்தது.

இந்த சம்பவம் எதிரொலியாக, தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து போலீஸார், அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று சென்னையில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர்.வள்ளியூரில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்  திருநெல்வேலியிருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற மூன்று அரசு பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியவில்லை, போக்குவரத்து விதியை சரியாக கடைபிடிக்கவில்லை, சீருடை சரியாக அணியவில்லை என்று கூறி ஒவ்வொரு பேருந்து ஓட்டுனருக்கும் தலா 500 ரூபாய் அபராதம் விதித்து அதற்கான ரசீதை ஓட்டுநர்களிடம் கொடுத்து அனுப்பினார்.

தொடர்ச்சியாக காவலர்களுக்கும்,  அரசு போக்குவரத்து ஓட்டுநர், நடத்துனருக்கும் இடையான பணிபோர் முற்றி வருகிறது. நாங்குநேரியில் நடந்த சம்பவத்தின் எதிரொலியாக தற்போது நடக்கும் இந்த சம்பவங்கள் போக்குவரத்து துறைக்கும், காவல்துறைக்குமான மோதலாக பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

இதுதொடர்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், தலைமைச் செயலருக்கும்,போக்குவரத்து செயலருக்கு கடிதம் எழுதினர். இதனையடுத்து தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்து செயலாளர் பணிந்தீரரெட்டி உடன் திடீர் ஆலோசனை நடத்தினர். இதன் காரணமாக போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் காவல்துறை இடையே பிரச்சினை நீடித்து வரும் இரு தரப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தகவல் வெளியானது.

இதற்கிடையே பிரச்சனைக்கு காரணமான காவலர் ஆறுமுகபாண்டியும், நடத்துனரும் சமாதனமாகியுள்ளனர். இருவரும் நேரில் சந்தித்து டீ குடித்து பேசியதோடு அதனை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளனர். அப்போது பேசிய நடத்துனர்,"பேருந்தில் பயணம் செய்த போது நான் வாரண்ட் கேட்டேன். அதற்குப் பிறகு நீங்கள் டிக்கெட் எடுத்து விட்டீர்கள்.. ஆனால் சோசியல் மீடியாவில் அதை தவறாக பரப்பி விட்டார்கள்.. இதனால் தான் பிரச்சனை" என்றார். அதனை தொடர்ந்து பேசிய காவலர் ஆறுமுக பாண்டி என் மீதும் தவறு உள்ளது. இருவருமே அரசு துறையில் பணியாற்றுகிறோம் இனிமேல் ஒன்றாக இருப்போம் என கைகுலுக்கினர்.


 

Trending News

Latest News

You May Like