இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..! தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள்..!
புதிய வாக்காளர் பட்டியல் இன்று (ஜன.,06) வெளியிடப்பட்டது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3.11 கோடி, பெண் வாக்காளர் 3.24 கோடி, 3ம் பாலினத்தவர்கள்- 9,120 பேர் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.