நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு..!
தனுஷ் ஆரம்பத்தில் உருவக் கேள்விகளையும் பல விமர்சனங்களையும் சந்தித்தவர். அதன் பின்பு ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்தார். அதன் பின்பும் பல விமர்சனங்கள் குவிந்தன. தனுசுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா? என பலரும் பலவாறு பேசினார்கள்.
எனினும் அவர் எந்த இடத்திலும் ரஜினியின் மருமகன் என்ற அடையாளம் தன் மீது விழாத வகையிலேயே நடந்து கொண்டார். தனது திறமையை படிப்படியாக வளர்த்து அதன் மூலம் பல வாய்ப்புகளை பெற்றார். கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் புகுந்து விளையாடினார்.
தனுஷும் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டு சுமூகமாகத்தான் தங்களது வாழ்க்கையை கொண்டு சென்றார்கள். ஆனால் திடீரென இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதற்கு முடிவு எடுத்தார்கள். இவர்களை இணைத்து வைப்பதற்காக இரண்டு வீட்டாரும் பல முயற்சிகளை முன்னெடுத்தார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய முடிவில் உறுதியாக உள்ளனர்.
தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து பிரிவை அறிவித்தார்கள். பிரிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். அந்த வழக்கு விசாரணைக்கு இரண்டு முறை இருவருமே நேரில் ஆஜராகவில்லை.
அதை பார்த்த ரசிகர்களோ தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் மீண்டும் சேரப் போகிறார்கள் என சந்தோஷப்பட்டார்கள். ஆனால் அவர்களின் சந்தோஷம் நிலைக்கவில்லை. மூன்றாவது முறையும் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார்கள் என நினைத்த நிலையில் தனுஷும், ஐஸ்வர்யாவும் நீதிமன்றத்திற்கு வந்துவிட்டார்கள்.
இதையடுத்து விவாகரத்து வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
தற்போது இது தொடர்பில் பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தனியா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், ரஜினிகாந்த் என்னதான் சூப்பர் ஸ்டார் ஆக இருந்தாலும் அவரும் ஒரு தந்தை தான். தனுஷையும் ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவர்கள் தங்கள் முடிவில் இருந்து மாறவில்லை.
தனுஷ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என வளர்ந்து விட்டார். அவரது ரேஞ்ச் இப்போதைக்கு வேறு. ஆனால் ஐஸ்வர்யா அப்படி இல்லை. அவரின் தந்தை ஒரு நடிகர். அவர் மூன்று படங்களை தான் எடுத்து இருக்கின்றார். அதுவும் பெரிதாக எடுபடவில்லை. இதனால் அவரால் தனுசுடன் போட்டி போட்டு வெல்ல முடியாது.
தந்தையை வைத்து படமெடுக்க ஆசைப்பட்டு லால் சலாம் மூலம் நிறைவேற்றினார். இந்த விவாகரத்துக்கு பின்பு தனுஷுக்கு இரண்டாவது திருமணம் செய்ய கஸ்தூரி ராஜா முடிவெடுத்துள்ளார். ஆனால் தனுஷ் திருமணம் செய்வாரா? இல்லையா? ஐஸ்வர்யாவும் இரண்டாவது திருமணம் செய்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.