1. Home
  2. தமிழ்நாடு

ஃபிலிம் ஃபேர் விருது அறிவிப்பு : சிறந்த நடிகர், நடிகைக்கான விருது யார் யாருக்கு?

Q

இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அனிமல்’.கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி அனிமல் திரைப்படம் வெளியானது. நேற்று இரவு நடைபெற்ற பிலிம்பேர் விருதுகள் நிகழ்ச்சியில் அதிகபட்சமாக ஆறு விருதுகளை அனிமல் திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த நடிகர் விருதை அனிமல் படத்தில் நடித்ததற்காக ரன்பீர் கபூர் பெற்றார். இந்த விருதுமட்டுமின்றி அனிமல் படத்திற்கு ஆறு விருதுகள் கிடைத்துள்ளது.

ரன்பீர் கபூருக்கு சிறந்த நடிகர் விருதும் அவரது மனைவி ஆலியா பட்டுக்கு சிறந்த நடிகை விருதும் வழங்கப்பட்டது. நெப்போடிசத்தின் உச்சியில் பாலிவுட் இருந்து வருகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிறந்த நடிகர் – ரன்பீர் கபூர்

சிறந்த இசை ஆல்பம் – அனிமல்

சிறந்த பின்னணி பாடகர் : பூபிந்தர் பப்பல் (அனிமல்)

சிறந்த பின்னணி இசை: ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் (அனிமல்)

சிறந்த ஒலி வடிவமைப்பு: குணால் ஷர்மா (அனிமல்)

வரவிருக்கும் சிறந்த இசை திறமை ( Best Upcoming Music Talent) – ஷ்ரேயாஸ் பாரானிக் ( அனிமல்)

தொடர்ந்து இந்த விழாவில், சிறந்த படத்திற்கான விருது 12th Fail திரைப்படத்திற்கும்

சிறந்த இயக்குனருக்கான விருது, விது வினோத் சோப்ராவுக்கும்(12th Fail) வழங்கப்பட்டது.

சிறந்த VFX பணிகளுக்காக ஜவான் படத்தை தயாரித்த ரெட் சில்லிஸ் நிறுவனம் வென்றுள்ளது.

பதான் படத்தில் இடம்பெற்ற பேஷாரம் ரங் பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை ஷில்பா ராவ் வென்றார்.

Trending News

Latest News

You May Like