திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு..!
2024-2025ஆம் கல்வி ஆண்டில் பின்வரும் பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பப் படிவங்களை 20.05.2024க்குள் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 27.05.2024க்குள் சமர்ப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்பபட்டது.
· இளங்கலை காட்சிக்கலை (ஒளிப்பதிவு) Bachelor of Visual Arts (Cinematography)
· இளங்கலை காட்சிக்கலை பிரிவு (எண்மிய இடைநிலை) Bachelor of Visual Arts (Digital Intermediate)
· இளங்கலை- காட்சிக்கலை (ஒலிப்பதிவு) Bachelor of Visual Arts (Audiography)
· இளங்கலை காட்சிக்கலை பிரிவு (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்) Bachelor of Visual Arts (Direction and Screenplay writing)
· இளங்கலை காட்சிக்கலை (படத்தொகுப்பு) Bachelor of Visual Arts (Film Editing)
· இளங்கலை காட்சிக்கலை பிரிவு (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்) Bachelor of Visual Arts (Animation and Visual Effects)
தற்போது, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கான கால அவகாசம் 05.06.2024 வரையிலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 10.06.2024 வரையிலும் நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையிலும், குறிப்பாக அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான இட ஒதுக்கீடும், மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைகளைப் பின்பற்றியும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tn.gov.in எனும் இணையதம் வாயிலாக பதிவிறக்கம் செய்திடலாம் என்றும், மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விபரங்களை தகவல் தொகுப்பேட்டினை பார்த்து அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மாணவர்களின் நலன் கருதி நீட்டிக்கப்படும் கால அவகாசத்தினை கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ மாணவியரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் - மாணவர் சேர்க்கை 2024-2025 - கால அவகாசம் நீட்டிப்பு#CMMKSTALIN | #TNDIPR | @CMOTamilnadu | @mkstalin | @mp_saminathan pic.twitter.com/1wJHkmAaCi
— TN DIPR (@TNDIPRNEWS) May 20, 2024