1. Home
  2. தமிழ்நாடு

இன்று தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வர அனுமதி..

1

இந்தியாவில் வரும் ஜூன் 6ஆம் தேதியுடன் மத்தியில் ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், தேர்தல் நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 20-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும், மார்ச் 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 28-ந் தேதி வேட்புமனு பரிசீலனையும், மார்ச் 30-ந் தேதி வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

39 பாராளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டிற்கும், 1 பாராளுமன்றத் தொகுதியை கொண்ட புதுச்சேரிக்கும் ஒரே கட்டமாக, அதுவும் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 6,18,90,348 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,30,96,330; பெண் வாக்காளர்கள் 3,41,85,724 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,294 பேர்.

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை (மார்ச் 20) தொடங்குகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27-ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28-ஆம் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். மாநிலத்திலுள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கலை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்திலுள்ள 3 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழ்நாட்டில் இன்று தொடங்குவதை ஒட்டி வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி. வேட்பாளர்கள் இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம். வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் நாளில் பிற்பகல் 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமையிலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like