2026 உலகக் கோப்பை கால்பந்து அட்டவணை..!
FIFA உலகக் கோப்பை 2026 தொடரின், இறுதிப் போட்டி 2026 ஜூலை 19ஆம் தேதி, நியூயார்க் அரங்கத்தில் நடைபெறவுளது. இந்த மைதானம், நியூயார்க் நகரத்தில் இருந்து, 5 மைல் தொலைவில் அமைந்துள்ளது. 82,500 பார்வையாளர்கள் வரை அமர்ந்து இப்போட்டியை காண முடியும். இந்நிலையில், பைனல் நடைபெறவுள்ள மைதானத்தை, சீரமைக்கும் வேலைகளை உடனே துவங்கிவிட்டதாக, நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் மற்றும் கவர்னர் பில் மார்பி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
முதல் போட்டி, 2026 ஜூலை 11ஆம் தேதி, மெக்சிகோ சிட்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில், சுமார் 83,000 பார்வையாளர்கள் வரை அமரலாம். 1970 ஆம் ஆண்டில், இங்குதான், FIFA உலகக் கோப்பை துவக்கப் போட்டி நடைபெற்றது. அதன்பிறகு, தற்போதுதான் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 1986ஆம் ஆண்டில், இங்கு பைனல் நடைபெற்றது. 1986ஆ் ஆண்டில், இங்கு அர்ஜெண்டினா வீரர் மரடோனா அடித்த 'ஹேண்ட் ஆப் காட்' கோல், மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. காலியிறுதியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக அடித்தார்.
காலியிறுதி ஆட்டங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ், கனஸ் சிட்டி, மியாமி, போஸ்டன் ஆகிய நகரங்களில் நடைபெறும். அரையிறுதிப் போட்டிகள் டல்லஸ், அட்லாண்டா ஆகிய நகரங்களில் நடைபெறும்.
The 2026 FIFA World Cup schedule is here. 🤩 pic.twitter.com/FbdPQXIsLw
— CBS Sports Golazo ⚽️ (@CBSSportsGolazo) February 4, 2024