பெண் நீதிபதியின் மகன் சுட்டு கொலை !!

பெண் நீதிபதியின் மகன் சுட்டு கொலை !!

பெண் நீதிபதியின் மகன் சுட்டு கொலை !!
X

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் வடக்கு பிரன்ஸ்விக் பகுதியில் வசித்து வருபவர் எஸ்தர் சலாஸ். அமெரிக்க மாவட்ட நீதிபதியான இவரது கணவர் மார்க் ஆண்டெல் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த தம்பதியின் ஒரே மகன் டேனியல் ஆண்டெல்.  கல்லூரியில் படித்து வந்துள்ளார்.  இந்நிலையில், சலாசின் வீட்டுக்கு டெலிவரி செய்வதற்காக சென்ற மர்ம நபர் ஒருவர் வீட்டின் வாசலில் வைத்து டேனியலை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  

இதேபோன்று, டேனியலின் தந்தையையும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டு விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டார். இதில், டேனியல் உயிரிழந்து விட்டார்.  நீதிபதியின் கணவர் படுகாயமடைந்து உள்ளார்.

சம்பவம் நடந்தபொழுது, நீதிபதி சலாஸ் கீழ்தளத்தில் இருந்துள்ளார்.  அதனால் அவர் காயமடையவில்லை. இதுபற்றி நியூஜெர்சி கவர்னர் பில் மர்பி கூறும்பொழுது, இது அறிவற்ற ஒரு செயல்.

நாட்டில் தொடர்ந்து ஆபத்துக்கு உரிய ஒன்றாக துப்பாக்கி கலாசாரம் உள்ளது. அதனை நினைவில் கொள்வதற்கான சோக நிகழ்வாக இது அமைந்துள்ளது.  ஒவ்வொரு சமூகமும் பாதுகாப்புடன் இருப்பதற்கான நமது பணி இன்னும் முடியவில்லை என கூறியுள்ளார்.

Newstm.in

Next Story
Share it