பெண் கவுன்சிலர் சடலமாக மீட்பு.. பெரும் பரபரப்பு.. காவல்துறை தீவிர விசாரணை !!

ஒன்றிய பெண் கவுன்சிலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஒழுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா (35). வழக்கறிஞரான இவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் பணியாற்றிவந்தார். இவரின் கணவர் செந்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அலுவலராக பணியாற்றி ருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 15ஆவது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட ரேணுகா பெற்றியும்பெற்றார். இதன்பிறகு அவர், ரேணுகா தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.
இந்த நிலையில், இன்று காலை ரேணுகா தனது வீட்டு படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்ததும் அவரது கணவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதனால் அப்பகுதி மக்கள் அங்கு கூடினர். ரேணுகா திடீரென தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் போலீசார் சென்று அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, முதல்கட்டமாக குடும்ப பிரச்சனை காரணமாக ரேணுகா தற்கொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த உள்ளாட்சித்தேர்தலில், அதிக வட்டிக்கு கடன் பெற்று தேர்தலில் போட்டியிட்டதாகவும் கடனை கொடுத்தவர்கள் வட்டியுடன் பணத்தை திருப்பி செலுத்த நிர்பந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன் - மனைவி இவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில், பாக்கம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் ரேணுகா, இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் ரேணுகா தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் கவுன்சிலர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in