சாக்குமூட்டையில் பெண் உடல்.. அலறிய மகன்கள்.. தந்தை தப்பியோட்டம் !!

மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரத்தில் ரமேஷ் (46)- வாணி (41)தம்பதி வசித்து வந்தனர். மகன்கள் கெளதம் (15), ஹரிஷ் (12) என 2 மகன்கள் உள்ளனர். கணவர் ரமேஷ் மதுபோதைக்கு அடிமையானவர் என்றும் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரமேஷ், கடந்த இருபதாம் தேதி திடீரென வெளியூர் சென்றுள்ளார்.
ரமேஷின் மூத்த மகன் கெளதம், அம்மா எங்கே என்று கேட்டபோது அம்மா வீட்டை விட்டு வெளியேறி விட்டாா் என்று கூறியுள்ளாா். அன்று இரவு வீட்டில் கெளதம், அவரது நண்பா் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனா். ஹரிஷ் அருகே உள்ள அவரது பாட்டி வீட்டில் இருந்துள்ளாா். அதேநேரத்தில் தாய் வாணியைக் காணாமல் மகன்கள் இருவரும் தேடித் திரிந்துள்ளனர்.
இரண்டு நாட்களாக தாயும் தந்தையும் இல்லாமல் மகன்கள் சிரமமடைந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் துர்நாற்றம் வீசியதோடு, மேஜையின் கீழே இருந்த சாக்கு மூட்டையிலிருந்து ரத்தம் கசிந்திருந்ததைப் பார்த்துள்ளனர்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் அங்கு சென்ற ஓட்டேரி காவல்துறையினர், மூட்டையைப் பிரித்தபோது, உள்ளே ரத்தக்காயங்களுடன் வாணியின் உடல் இருந்ததைப் பார்த்துள்ளனர். உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பிய காவல்துறையினர், தலைமறைவாகிய ரமேஷை தேடி வருகின்றனர். மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in