1. Home
  2. தமிழ்நாடு

அதிகாலையில் கைது செய்யப்பட்டார் பெலிக்ஸ்..!

Q

பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தேனி சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் கோவை அழைத்து சென்றனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவரது வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் சோதனை நடத்திய நிலையில் அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பெண் காவலர்கள் குறித்து இழிவாக விவாதம் நடத்திய பெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோர் மீது தமிழர் முன்னேற்ற படை நிறுவனர் வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் சென்னை மாநகர காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேசன் பாபு, பெண் காவலர்கள் குறித்து இழிவாக விவாதம் நடத்திய பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார். யூடியூப் சேனல்கள் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டு சமுதாயத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக நீதிபதி குறிப்பிட்டார்.
மேலும் இந்த வழக்கில் அநாகரீகமாக விவாதம் செய்த பெலிக்ஸ் ஜெரால்டை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என்று தனது கருத்தையும் பதிவு செய்தார்.  
இந்த நிலையில் சவுக்கு சங்கர் கைதை தொடர்ந்து ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலின் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் வைத்து தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் அவரை இன்று அதிகாலையில் கைது செய்திருக்கின்றனர். அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Trending News

Latest News

You May Like