மத்திய அரசின் அன்லாக் 5.0 - புதிய தளர்வுகள், தொடரும் தடைகள் என்னென்ன ?

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் மத்திய அரசின் சார்பில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 40 நாள்களுக்கு முழு ஊரடங்கு தொடர்ந்து நிலையில், அதன்பிறகு ஒவ்வொரு மாதமும் புதிய புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன் நீட்சியாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நேற்றுடன் (செப்.30) நிறைவடைந்தது.
இதனையொட்டி தமிழக அரசு சார்பில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், நேற்றிரவு மத்திய அரசு சார்பில் புதிய தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய தளர்வுகள்:
- அக்டோபர் 15-ம் தேதிக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம்
- அக்டோபர் 15-ம் தேதித்துக்குப் பிறகு 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதிக்கப்படுகிறது
- நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கவும் அனுமதிக்கப்படுகிறது
- மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு எந்த அனுமதியும் தேவையில்லை.
தொடரும் தடைகள்:
- கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அக்டோபர் 31-ம் தேதிவரை தொடரும்
- மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ள வழிகளைத் தவிர மற்ற சர்வதேச போக்குவரத்துக்கு தடை தொடரும்.
newstm.in