1. Home
  2. தமிழ்நாடு

பிப். 16 முதல் 18ஆம் தேதி வரை பேரவைக்கு விடுமுறை..!

Q

இன்று (பிப்.12) காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் உரையுடன் தொடங்கியது. உரையை வாசிக்கத் தொடங்கிய இரண்டு நிமிடங்களிலேயே நிறைவுச் செய்தார். எனினும், பேரவையில் தனது இருக்கையிலேயே ஆளுநர் அமர்ந்திருந்தார்.

இதை தொடர்ந்து ஆளுநரின் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். 

இந்நிலையில், தமிழ்நாட்டு சட்டமன்ற கூட்டத்தொடர் பிப்.22ம் தேதி வரை நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆளுநர் உரை மீதான விவாதம் மற்றும் பதிலுரை பிப்.15ஆம் தேதி வரை நடைபெறும்.

பிப். 16 முதல் 18ஆம் தேதி வரை பேரவைக்கு விடுமுறை என அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிப்.19ம் தேதி பட்ஜெட்டும், 20ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like