வைரலாகும் பாத்திமா விஜய் ஆண்டனி பதிவு.!

விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஆண்டனி பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மீரா, லாரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் மீரா பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் இன்று அதிகாலை மூன்று மணியளவில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மன அழுத்தம் காரணமாக மீரா இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனிடையில் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திரையுலகம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மீரா குறித்து அவரின் தாயார் பாத்திமா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பழைய பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தனது மகள் மீரா பள்ளி மாணவர் சங்கத்தின் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டதிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் பாத்திமா.
மேலும், என் வலிமைக்கு பின்னால் இருக்கும் சக்தி. என்னுடைய கண்ணீருக்கு ஆறுதல். குறும்புகளால் என் மன அழுத்தத்திற்கு காரணமான என் தங்கக்கட்டி, செல்லக்குட்டி மீரா விஜய் ஆண்டனி. வாழ்த்துக்கள் பேபி என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். கடந்த மார்ச் 12 ஆம் தேதி தான் இந்த பதிவை பகிர்ந்திருந்தார் பாத்திமா.அதற்குள் மீரா இப்படிப்பட்ட முடிவை எடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
In March of this year, Mrs.Fatima Vijay Antony was so happy that her daughter #MeeraVijayAntony become the cultural secretary of her school students association..
— Ramesh Bala (@rameshlaus) September 19, 2023
We all congratulated her on Twitter..
She was the world to her parents..
Can't imagine the pain 💔 😢 https://t.co/aFvuWwcX5I
In March of this year, Mrs.Fatima Vijay Antony was so happy that her daughter #MeeraVijayAntony become the cultural secretary of her school students association..
— Ramesh Bala (@rameshlaus) September 19, 2023
We all congratulated her on Twitter..
She was the world to her parents..
Can't imagine the pain 💔 😢 https://t.co/aFvuWwcX5I