1. Home
  2. தமிழ்நாடு

விஸ்வரூபம் எடுக்கும் அப்பா மகன் மோதல்...! அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: ராமதாஸ் எச்சரிக்கை..!

1

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள எஸ்.இ.டி. மஹாலில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தஞ்சை, திருவாரூர் மாவட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது. தேவை என்றால் அன்புமணி எனது பெயரை இனிசியலாக பயன்படுத்திக் கொள்ளலாம். என் பேச்சைக் கேட்கவில்லை என்றால் என் பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை; தசரதன் ஆணையை ஏற்று ராமர் வனவாசம் சென்றார். ஐந்து வயது குழந்தை போல் நான் செயல்படுவதாக சில கூறி வருகின்றனர். ஐந்து வயது குழந்தையான நான் தான் 3 வருடங்களுக்கு முன் அன்புமணியை பாமக தலைவராக்கியவன். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like